புதிய ஆத்திச்சூடி
புதிய ஆத்திச்சூடி என்பது பாரதியரால் எழுதப்பட்ட ஒரு நீதி நூல் ஆகும். இது ஒளவையாரின் ஆத்திச்சூடியின் தழுவலாய் எழுதப்பட்டது. மகாகவி பாரதியரால் எழுதப்பட்ட புதிய ஆத்திச்சூடி அனைவரும் அன்பும், வீரமும், தீரமும், வலிமையையும், சீற்றமும் உடைய மனிதர்களாக இருக்க வேண்டும் என்பதை உணர்த்துகிறது.

இது மொத்தம் 110 அறிவுரைகளை எளிய நடைமுறையில் கொண்டு அமைந்துள்ளது. இது ஒரு ஆகச்சிறந்த வாழ்வியல் நெறிமுறை நூல் ஆகும்.
கடவுள் வாழ்த்து
மோனத்திருக்கு முழு வெண்மேனியான்
கருநிறம் கொண்டு பாற்கடல் மிசை கிடப்போன்
மகமது நபிக்கு மறையருள் புரிந்தோன்
ஏசுவின் தந்தை எனப்பல மதத்தினர்
பலவகையாகப் பரவிடும் பரம் பொருள்
ஒன்றே ! அதனியல் ஒளியுறுமறிவோம்
அதனிலை கண்டார் அல்லலை அகற்றினார்
அதனருள் வாழ்த்தி அமர வாழ்வெய்துவோம்”
இப்பாடலில் சைவ, வைணவ,கிறிஸ்துவ, இஸ்லாமிய சமய கடவுள்கள் அனைவரையும் குறிப்பிட்டு இவ்வனைத்து சமயங்களிலும் கூறப்படும் மூலக்கருத்து ஒன்றே, அது அறிவு மட்டும்தான். அறிவு நிலை கண்டவர்களுக்கு எந்தவித துன்பமும் இல்லை. அதனால் தான் சுத்த அறிவே சிவம் என்றும் அறிவே தெய்வம் என்றும் குறிப்பிட்டிருப்பார். எனவே அத்தகைய அறிவை வாழ்த்தி புகழுடன் கூடிய வாழ்வை அடைவோம்.
நூல்
1. அச்சம் தவிர்
யாருக்கும், எதற்கும், எந்த சூழ்நிலையிலும் பயம் கொள்ளாதே.
2.ஆண்மைதவறேல்
3. இளைத்தல் இகழ்ச்சி
4.ஈகை திறன்
வறியவர்க்கு கொடுத்து உதவும் பண்பை வளர்த்து கொள்.
5. உடலினை உறுதி செய்
உடம்பை திடமாகவும், ஆரோக்கியமாகவும் வைத்து கொள்.
6. ஊண்மிக விரும்புஉணவு பெருக விருப்பம் கொள்.இது, உணவு உண்பதை விருப்பம் கொள் என்று தவறான கோணத்திலும் பார்க்கப்படுகிறது.,
7.எண்ணுவது உயர்வு
எண்ணங்கள் அனைத்தும் உயர்வாகவே இருக்க வேண்டும்.
8. ஏறு போல் நட
சிங்கம் போல் மிடுக்காக கம்பீரமாக நேர்கொண்ட பார்வையோடு நடந்து செல்.ஏறு - சிங்கம், காளை
9. ஐம்பொறி ஆட்சி கொள்
தன்னுடைய ஐம்பொறிகளான, மெய், வாய், கண், மூக்கு, செவி ஆகியவற்றின் ஐம்புலன்களாகிய உணர்தல், சுவைத்தல், பார்த்தல், நுகர்தல், கேட்டல் ஆகியவற்றை தன்னுள் கட்டுப்படுத்தி ஆட்சி கொள்ள வேண்டும்.
10. ஒற்றுமை வலிமையாம்
ஒற்றுமையுடன் செயல்பட்டால் அனைத்து செயல்களும் வெற்றியில் முடியும்.அனைத்து மனிதர்களுக்கும் ஒரே வகையான சிந்தனை இல்லாமல் இருப்பினும், வேறு வேறு சிந்தனையிலும் ஒற்றுமையுடன் செயல்பட வேண்டும்.
11. ஓய்த லொழி
சோம்பலை நீக்கு. சோர்வு ஒருவனுக்கு அழிவை தேடி தரும் ஒரு செயல் ஆகும். அத்தகைய சோம்பலை நீக்கி எந்த ஒரு செயலையும் சுறு சுறுப்பாக செய்து முடி.
12. ஔடதங் குறை
மருந்தை குறை. உன் உடலை நோய் வராமல் காத்து மருந்தை நாடுவதை குறை.
13. கற்றது ஒழுகு
கற்றதை பின்பற்று. நல்லவற்றை கற்று அதை வாழ்வில் நடைமுறைபடுத்திகொண்டு வாழ்.
14. காலம் அழியேல்
காலத்தை வீணாக்காதே. எவருக்கும் திரும்ப கிடைக்காத ஒன்று காலம் மட்டும் தான். அதை உன் வசப்படுத்தி கொண்டு வாழ். 15. கிளைபல தாங்கேல்
பல பொறுப்புகளை உன் முதுகில் ஏற்றி சுமக்காதே. பல கிளைகளை கொண்ட ஒரு மரமானது சிறிய காற்று அடித்தாலே கிளைகள் முறிய கூடும் அல்லது மரமே சாய்ந்து விழும் நிலைமை கூட ஏற்படலாம்.
16. கீழோர்க்கு அஞ்சேல்
இழிந்த எண்ணமும், குணமும் உடையவர்கள் உங்களை விட வலிமையானவராய் இருப்பினும் அவர்களை கண்டு பயப்படாதே.
17. குன்றென நிமிர்ந்துநில்
குன்றைப் போன்று நிமிர்ந்து நில்லுங்கள். குன்று என்பது மலையை விட உயரம் குறைவானது ஆகும். மழை பெய்தால் மலையானது சரியும், ஆனால் பாறையால் ஆன குன்றானது நிமிர்ந்து நிற்கும். நீங்கள் செய்யும் தொழிலின் தகுதி மற்றவரின் தொழிலின் தகுதியை விட சற்று குறைவாக இருந்தாலும் உயரம் என்பது தொழிலின் தகுதியில் இல்லை, உங்களிடம் உள்ள நேர்மையில் உள்ளது.
18. கூடித் தொழில்செய்
ஒன்றுகூடி தொழிலில் ஈடுபடு. சிறுமுதலால் லாபம் சிறிதாகும்; ஆயிரம்பேர்உறுமுதலால் லாபம் உயருமன்றோ தோழர்களே! என்றார் பாரதிதாசன்.
19. கெடுப்பது சோர்வு.
சோர்வு நமது செயல்பாட்டைக் கெடுத்துவிடும். சோர்வடைதல் இகழ்ச்சியை தேடி தரும். எந்த ஒரு செயலையும் சுறுசுறுப்பாக செய்து முடி.
20. கேட்டிலுந் துணிந்துநில்
துன்பத்திலும், வறுமையிலும் எத்தகைய தொல்லைகள் ஏற்பட்டாலும் தைரியத்தை விடாமல் துணிந்து இரு.
21. கைத்தொழில் போற்று
கைத்தொழில் ஒன்றை கற்று கொண்டு அதை இடைவிடாமல் செய்து கொண்டு இரு.
22. கொடுமையை எதிர்த்துநில்.
குற்றங்கள் நடக்கும் இடத்தில் அதை சாட்சியாக சகித்து கொண்டு பார்க்காமல் அதனை எதிர்த்து நில்.
23. கோல்கைக் கொண்டுவாழ்
ஆளுமையின் சின்னமாக இருப்பது கோல். ஒரு மனிதன் கம்பீரத்துடனும் நேர்மையுடனும் அரசன் போல் வாழ வேண்டும்.
24. கௌவியதை விடேல்
ஒரு காரியத்தை எடுத்ததற்கு பின் அதை பாதியில் விட்டுவிடாமல் விடாமுயற்சியுடன் செய்து முடி.
25. சரித்திரத் தேர்ச்சிகொள்.
வரலாற்றில் எது சரி, எது தவறு என்று தெளிவான புரிதலுடன் படித்து தேர்ச்சி கொள்.
26. சாவதற்கு அஞ்சேல்
மரணத்தை கண்டு ஒரு போதும் பயம் கொள்ளாதே.
27. சிதையா நெஞ்சுகொள்
நெஞ்சிலே உறுதி வேண்டும். நாம் எந்த ஒரு செயலில் ஈடுபட்டாலும் அதில் எந்தவித ஊசலாட்டமும் இருக்க கூடாது. நமக்கு ஏற்படும் துன்பங்களையும் இடையூறுகளையும் கண்டு மனம் உடையக் கூடாது.
28. சீறுவோர்ச் சீறு
யாரிடம் கோபம் கொள்ள வேண்டும் என்று தெளிவாக தெரிந்து கொண்டு அவர்களிடம் கோபப்படு.
29. சுமையினுக்கு இளைத்திடேல்
உன் பொறுப்புகளை கண்டு உன் மனம் ஒருபோதும் சோர்வடையக்கூடாது. அதை நீ தான் மனநிறைவுடன் செய்ய வேண்டும்.
30. சூரரைப் போற்று
யாருக்கும் அஞ்சாமல் எதற்கும் பயப்படாமல் மனதில் எந்தவித குழப்பமும், கலக்கமும் இன்றி தான் கொண்ட லட்சியத்திற்காக தன்னையே அர்ப்பணித்து அதில் வெற்றியும் பெற்றவர்களை நிச்சயமாக போற்ற வேண்டும்.
31. செய்வது துணிந்துசெய்
நாம் செய்யும் செயலில் எவ்வளவு இடையூறுகல் ஏற்பட்டாலும் அதனைக் கண்டு கலங்காமல் எவருக்கும் பயப்படாமல் துணிவுடன் செய்து முடி.
32. சேர்க்கை அழியேல்
நல்லனவற்றை அழித்து விடாதே. சேர்ந்து வாழும் பண்புக்கு எந்த ஊறும் விளைவிக்காதே,
33. சைகையிற் பொருளுணர்
ஒருவரின் சைகையில் பொருளுணர்ந்து அந்த வேலையே செய்து முடி.
34. சொல்வது தெளிந்துசொல்
நீ பேச விரும்பும் கருத்தினை தெளிவாக தெரிந்து கொண்டு குழப்பில்லாமல் உறுதியுடன் பேசு.
35. சோதிடந் தனையிகழ்
அறிவியல் சார்ந்து இல்லாத மூடநம்பிக்கையை தெளிவாக தெரிந்து கொண்டு சரியான முறையில் பகுத்தறிவுடன் அதனை தவறு என்று எடுத்து கூறு.
36. சௌரியந் தவறேல்
உடலை நன்றாக கவனித்து கொண்டு அனைத்து நலன்களும் கிடைக்கப்பெறுமாறு வாழ்.
37. ஞமலிபோல் வாழேல்
நாயை போல் வாழாதே. எலும்புத்துண்டுக்கு ஆசைப்பட்டு எவன் பின்னாடியும் வாலாட்டிக்கொண்டு வாழாதே. காரணமின்றி உசுப்பிவிட்ட இடத்தில் பாயாதே.நாயை போல் எச்சில் பிழைப்பு பிழைக்காதே.
38. ஞாயிறு போற்று
எண்ணற்ற ஆற்றலை கொண்ட சூரியனை போற்றி வணங்கு.
39. ஞிமிரென இன்புறு
மலர்வண்டுகளை போல், தேனீக்களை போல் சோர்வில்லாமல் சுறுசுறுப்பாக ரீங்கார இசை மீட்டு இன்புற்று வாழ்.
40. ஞெகிழ்வது அருளின்
இளகிய மனதுடன் இருந்து, அன்போடும் பரிவோடும் கருணையோடும் எந்தவித எதிர்பார்ப்பும் இன்றி அனைவருக்கும் உதவிசெய்.
41. ஞேயங் காத்தல்செய்
நல்ல நட்பினையும் உறவினையும் இழந்து விடாதே.
42. தன்மை இழவேல்
உன் தனித்தன்மையையும் சுயமரியாதையினையும் இழந்து விடாதே.
43. தாழ்ந்து நடவேல்
கீழான முறையில் நடக்காதே. யாருக்கும் எதற்கும் அடிபணிந்தும் நடக்காதே.
44. திருவினை வென்றுவாழ்
அனைத்து வகையான செல்வங்களையும் பெற்று வாழ்.
45. தீயோர்க்கு அஞ்சேல்
பாதகம் செய்பவரை கண்டால் நாம் பயம் கொள்ளல் ஆகாது பாப்பா மோதி மிதித்துவிடு பாப்பா அவர்கள் முகத்தில் உமிழ்ந்துவிடு பாப்பா
46. துன்பம் மறந்திடு
துன்பத்தையே நினைத்து துவண்டு போகாதே. துன்பங்களை கண்டு அஞ்சியும் ஓடாதே. அதை தாங்கும் மனவலிமையைபெற்று அத்துன்பத்திலிருந்து வெளியே வா.
47. தூற்றுதல் ஒழி
அடுத்தவரின் குற்றங்களை கண்டு அவரை பழித்து பேசிக்கொண்டே இருக்காதே. முடிந்தால் அவரிடம் இது தவறு என்று எடுத்து கூறி சரி செய்ய பார்.ஒருவர் இல்லாதபோது புறங்கூறுவது இழிச்செயல் ஆகும்.
48. தெய்வம் நீயென்றுஉணர்
எத்தனை கோயில்களை தேடி சென்றாலும் எத்தனை தெய்வங்களை கும்பிட்டாலும் உன் மனம் தான் தெய்வம் என்று நீ உணர்ந்துகொள்.
49. தேசத்தை காத்தல்செய்
அனைவரும் நாட்டுப்பற்றுடன் இருக்க வேண்டும். பாரத நாடு பழம்பெரும் நாடு நீர் அதன் புதல்வர் இந்நினைவகற்றாதீர் என்று பாடியிருப்பார். நமது நாட்டின் புகழ்களையும் பெருமைகளையும் அந்நியரிடம் கொடுத்துவிடாதே.
50. தையலை உயர்வுசெய்
பெண்களின் நிலையை உயர்த்த வேண்டும். ஆண்களும் பெண்களும் சரிநிகராக வாழ வேண்டும். பெண்களின் அறிவை வளர்த்தால் உலகில் பேதைமை நீங்கிடுமே என்று பாடினார்.
51. தொன்மைக்கு அஞ்சேல்
நவீன காலத்திற்கு ஒப்பில்லாத பழைய பழக்கவழக்கங்களை நிராகரிப்பதில் எந்த ஒரு அச்சஉணர்வும் வேண்டாம்.
52. தோல்வியிற் கலங்கேல்
தோல்வியை கண்டு ஒருபோதும் கலங்கிவிடாதே. தோல்வியை கண்டு மனமுடைந்து முயற்சி செய்வதை நிறுத்திவிடாதே. வெற்றியில் களிப்பும் தோல்வியில் கலக்கமும் கூடாது.
53. தவத்தினை நிதம்புரி
அன்பையும், உதவி செய்யும் குணத்தினையும் ஒருபொழுதும் விட்டுவிடாமல் தொடர்ந்து செய்து கொண்டு இரு. வையகத்தில் அன்பில் சிறந்த தவமும் இல்லை, அன்புடையார் இன்புற்று வாழ்தல் இயல்பு என்று பாடினார் பாரதி.
54. நன்று கருது
நல்லவற்றையே எண்ணல் வேண்டும். எண்ணிய எண்ணம் போல் வாழ்க்கை நடக்கும்.
55. நாளெல்லாம் வினைசெய்
நிதமும் ஏதாவது செய்து கொண்டே இரு. பூமி தன்னை சுற்றிக்கொள்வதை நிறுத்துவதுமில்லை, அலைகடல் ஓய்ந்து சாய்வதும் இல்லை. வீணாக வெட்டிப்பொழுது கழித்து சோம்பேறியாகாதே
56. நினைப்பது முடியும்
நன்று கருது, நாளெல்லாம் வினைசெய், நினைப்பது முடியும். நல்லவற்றையே திட்டமிட்டு எண்ணி தினமும் அதற்கான உழைப்பை இட்டால் நினைப்பது கண்டிபாக முடியும்.
57. நீதிநூல் பயில்
அறம் சார்ந்த போக்கில் உள்ள நீதி நூல்களை படி. நீதி, உயர்ந்த மதி, கல்வி, அன்பு நிறைய உடையவர்கள் மேலோர் என்று பாப்பா பாட்டில் கூறியிருப்பார்.
58. நுனியளவு செல்
எந்த செயலை எடுத்துக்கொண்டாலும் அதனின் எல்லை வரை செல். முழுமையாக எந்த காரியத்தையும் முடித்துவிடு
59. நூலினை பகுத்துணர்
தெளிவான சிந்தனையுடன் நூல்களை படித்து பகுத்து உணர்ந்து கொள்.
60. நெற்றி சுருக்கிடேல்
அனாவசிய எரிச்சல், கோபம், பொறாமைகொள்ளாதே.எவ்வளவு துயரங்கள் இருப்பினும் முகமலர்ச்சியுடன் இரு.
61. நேர்படப் பேசு
மனதில் கள்ளம் கபடம் கொண்டு உள்ளொன்று வைத்து புறம் ஒன்று பேசாதே.நேர்படப் பேசு. மிகைப்படக்கூறல், கூறியவைகூறல் எதுவும் கூடாது.
62. நையப் புடை
மனதில் உள்ள தீய எண்ணங்களை முழுமையாக அகற்று. எந்த ஒரு செயலையும் அரைகுறையாக முடிக்காதே.
63. நொந்தது சாகும்
எவ்வளவு துயரங்கள் இருப்பினும் மனச்சோர்வு அடைந்துவிடாதே. மனச்சோர்வு அடைந்தவர்கள் அழிந்து போவார்கள்.
64. நோற்பது கைவிடேல்
நோற்பது என்றல் விரதம் இருப்பது என்று பொருள்படும். ஒழுக்கம் சார்ந்த நெறியை, மனஉறுதியை, அன்பு செலுத்துவதை ஒருபோதும் கைவிட்டு விடாதே.
65. பணத்தினைப் பெருக்கு
பணத்தினை அதிகமாக்கு. பணத்தினை நல்ல வழியில் சேர்த்து அதனை உனக்கும், மற்றவர்களுக்கும் பயன்படுமாறு செய்.
66. பாட்டினில் அன்புசெய்
அன்பு தான் அனைத்திற்கும் முதன்மையானது. இசை இல்லாமல் வாழ்க்கையில் எந்த ஒரு செயலையும் வகைப்படுத்த இயலாது. இசையையும், வரிகளையும் அன்பு மிகுந்தவாறு இயற்று.
67. பிணத்தினைப் போற்றேல்
கடந்த காலத்தை எண்ணி அதிகம் பெருமைபட்டு கொள்ளாதே. எதிர்காலம் அதை நினைத்தே சென்றுவிடும். உணர்வுகள் இல்லாத மனிதரை மதிக்காதே.
68. பீழைக்கு இடங்கொடேல்
துன்பத்திற்கு ஒருபோதும் இடம்கொடுக்காதே. துன்பத்தை நினைத்துக்கொண்டே இருப்பதால் மேலும் அது மனதை வலுவிழக்கச் செய்யும். துன்பத்தை சற்று தள்ளிவைத்து அதனை தூக்கி எறிந்துவிடு.
69. புதியன விரும்பு
முற்காலத்தின் நடைமுறைகளை நடப்பாண்டுடன் ஒப்பிட்டு குழம்பி கொள்ளாமல் புதியனவற்றை உருவாக்கு.
70. பூமி இழந்திடேல்
இயற்கையை அழித்துவிடாதே. நீயும் அழிந்து போவாய். பத்து மாதம் உன்னை வயிற்றில் சுமக்கும் உன் தாய்க்கு நீ வாழ்நாள் முழுதும் கடமைப்பட்டிருக்கிறாய். உன் வாழ்நாள் முழுதும், நீ அழிந்து போன பிறகும் உன்னை சுமக்கும் இந்த பூமிக்கு ஏதாவது செய்துவிட்டு செல்.
71. பெரிதினும் பெரிதுகேள்
நினைப்பது அனைத்தும் பெரிய இலக்காகவே இருக்கவேண்டும். கனவுகாண்பதில் கஞ்சத்தனம் வேண்டாம். அது உனக்கு கிடைக்காவிட்டாலும் உன் நினைப்பை கைவிட்டுவிடாதே. அதற்கு நீ செய்த முயற்சி உன்னை ஒருபோதும் தளரவிடாது.
72. பேய்களுக்கு அஞ்சேல்
நமது மனதிற்குள் உள்ள பொய்மையுள்ள எதிர்மறையான கருத்துக்களைக் கண்டு பயப்படாதே. அதனை தூக்கி எறிந்துவிடு. மனதில் பொய்மையையும், கொடூர குணத்தையும் உடைய மனித பேய்களை கண்டு அஞ்சிவிடாதே.
73. பொய்மை இகழ்
பொய்யான கருத்துகளை தெளிவான பகுத்தறிவுடன் கண்டறிந்து அதனை இகழ்ந்து பேசி நீக்கிவிடு. பொய்பேசல் கூடாது.
74. போர்த்தொழில் பழகு தற்காப்புக்கலைகளை கட்டாயம் கற்றுக்கொள். அது உன் உடல்வலிமையையும், மனவலிமையும் சீராக வைக்கும்.
75. மந்திரம் வலிமை
மாற்றத்தையும், நம்பிக்கையையும் கொண்டு உள்ளத்தில் உருவாகும் நல்ல எண்ணங்களால் பேசப்படும் அனைத்து வார்த்தைகளும் வலிமையுடையது ஆகும்.
76. மானம் போற்று
தன்னிலை தாழ்ந்து எவரிடமும் நடக்காதே. கொடுப்பது புண்ணியம் என்றாலும் ஏற்பது இகழ்ச்சி ஆகும்.
77. மிடிமையில் அழிந்திடேல்
வறுமையினால் அழிந்துவிடாதே. ஏழ்மை காரணத்தினால் உன் வாழ்க்கையை இழந்துவிடாதே. இறுதிவரை ஏழையாகவே இருந்துவிடாதே.
78. மீளுமாறு உணர்ந்துகொள்
அழிவை ஏற்படுத்தும் சோர்விலிருந்தும், சூழ்ச்சியிலிருந்தும் மீளுமாறு உணர்ந்துகொள்
79. முனையிலே முகத்துநில்
எந்த ஒரு செயலிலும் தொடக்கத்திலிருந்தே முனைப்புடன் இருக்க பழகிக்கொள். முடிவதற்குள் முடித்துவிடலாம் என்று அசாதாரணமாக இருக்காதே.
80. மூப்பினுக்கு இடங்கோடேல்
வயதான பிறகு உடல் தளர்ச்சியையும் அதிக நோயையும் சம்பாதித்துவிடாதே. வயதானாலும் உடலை கட்டுக்கோப்புடன் வைத்திரு.
81. மெல்லத் தெரிந்துசொல்
எந்த ஒரு கருத்தை முன்வைப்பதற்கு முன்னும் அதை தெளிவாக தெரிந்து கொண்டு அதன் முழு வரலாற்றையும் அறிந்து கொண்டு பேசு.
82. மேழி போற்று
விவசாயத்தை போற்ற வேண்டும். மேழி என்றால் ஏர்க்கருவி. மேழியால் விளைவதல்லால் வேறொன்றால் விளையாவே என்கிறார் கம்பர். ஏர்க்கருவிகளால் விளையும் உணவை வேறு எதைக்கொண்டும் உருவாக்க முடியாது.
83. மொய்ம்புறத் தவஞ்செய்
முழுமனதுடன் அன்பை காட்டு . மனதில் எந்தவித சலசலப்பில்லாமல் உதவிசெய்.
84. மோனம் போற்று
மோனம் என்றால் ஆழ்ந்த சிந்தனையுடன் கூடிய ஒரு அமைதி. உனது வெற்றிக்கு அடிப்படை காரணமே உன் சிந்தனை தான். அச்சிந்தனையை போற்று.
85. மௌட்டியந் தனைக்கொல்
அறியாமையை உன் தெளிவான பகுத்தறிவால் அழித்துவிடு. நான் தான் என்ற கர்வம் ஒருபோதும் வந்துவிட கூடாது.
86. யவனர்போல் முயற்சிகொள்
பண்டைய காலத்தில் கடல் வழியே வாணிபம் செய்ய வந்த கிரேக்கர்களை யவனர்கள் என்று சங்க இலக்கியங்கள் குறிப்பிடுகின்றது. அனைத்து துறைகளிலும் சிறந்து விளங்கிய ஆகச்சிறந்த முயற்சியாளர்களான யவனர்கள் போல் முயற்சிகொள்.
87. யாவரையும் மதித்துவாழ்
எவரிடமும் வேற்றுமை பாராமல் மதிப்புடனும் மரியாதையுடனும் நடத்து.
88. யௌவனம் காத்தல்செய்
யௌவனம் என்றால் இளமை, அழகு என பொருள்படும். இளமையும், அழகும் குறையாமல் பார்த்துக்கொள்.
89. ரஸத்திலே தேர்ச்சிக்கொள்
நவரசத்தின் உணர்வையும் கட்டுப்பாட்டுடனும் தெளிவுடனும் தேவையறிந்து வெளிப்படுத்து.
90. ராஜஸம் பயில்
இயற்கையின் முக்குணங்களில் ஒன்றான ராஜஸ குணசத்தின் இயல்பு செயல்படுவதில் அதீத ஆர்வம், ஞானம், வீரம், முயற்சி, தருமம் ஆகியவற்றை உள்ளடக்கியது ஆகும். எனவே ராஜஸம் பயில் என்கிறார்.
91. ரீதி தவறேல்
ரீதி என்பது ஒழுங்கு மற்றும் நிலைமை என பொருள்படும். எந்த ஒரு செயலிலும் ஒழுக்கத்தை பின்பற்று.
92. ருசிப்பல வென்றுணர்
பல்வேறு கலைகளை ரசனைகளை கற்றுத்தேர்ந்து வென்றுணர்.
93. ரூபம் செம்மைசெய்
ரூபம் என்பது ஒன்றின் வடிவமைப்பு ஆகும். உடல் வடிவத்தை, உடல் உறுப்புகளை சீராக வைத்துக்கொள். எந்த ஒரு கட்டமைப்பையும் அழகுடன் வைத்திரு.
94. ரேகையில் கனிகொள்
அறிவினார்க்கில்லை அதிர வருவதோர் நோய் என்பது போல எதிர்காலத்தில் நடக்க இருக்கும் ஆபத்தை முன்கூட்டியே கணிப்பவருக்கு அந்த ஆபத்து எந்தவித துன்பத்தையும் ஏற்படுத்தாது.
95. ரோதனம் தவிர்
எந்த ஒரு துன்பத்தையும் மற்றவர்களிடம் புலம்பிக்கொண்டிருப்பதை முழுவதுமாக தவிர்த்துவிடு. அது ஒரு மிகக்கேவலமான செயல் ஆகும்.
96. ரௌத்திரம் பழகு
கண் முன்னே நடக்கும் அநீதிகளை கண்டும் காணாமல் இருக்காமல் அதை கோபப்பட்டு எதிர்த்து நிற்பதற்கு பழகிக்கொள். வெளிப்பட வேண்டிய இடத்தில் வெளிப்படாத கோபமும் குற்றத்தை ஏற்படுத்தும்.
97. லவம் பலவெள்ளமாம்
சிறு துளி பெரு வெள்ளம் ஆகும். எதை ஒன்றையும் சிறியது என்று ஏளனப்படுத்திவிடாதே.
98. லாவகம் பயிற்சிசெய்
எந்த ஒரு காரியத்தை எடுத்தாலும் அதன் முழு நுணுக்கங்களையும் கற்றுத் தேர்ந்து வைத்துக்கொள்.
99. லீலை இவ்வுலகு
இவ்வுலகில் நடக்கும் அனைத்து செயல்களும் இயற்கையின் விளையாட்டே ஆகும். இன்பத்தையும், துன்பத்தையும் சரிசமமாக வைத்துக்கொள். நடக்கவேண்டிய அனைத்தும் இயற்கையின் மாற்றத்தால் சரியாகவே நடக்கும்.
100. (உ) லுத்தரை இகழ்
தீயவர்கள், அயோகியர்களை இகழ்ந்து பேசு.
101. (உ)லோகநூல் கற்றுணர்
பூமியின் இயல்பை தெளிந்து கற்றுக்கொள். உலோகம் கொண்டு உலகை வளர்ப்போம் என்ற வாக்கியமும் உள்ளது. இன்று பல வேலைவாய்ப்புகள் உலோகங்களை கொண்டு தான் உள்ளது.
102. லௌகிகம் ஆற்று
நமது பணிகளை கடமைகளை செம்மையுற செய்யவேண்டும்.
103. வருவதை மகிழ்ந்துண்
நினைப்பது கிடைக்காவிட்டாலும் நினைப்பதை விடாமல் கிடைப்பதை மகிழ்ச்சியுடன் பெற்றுக்கொள்.
104. வானநூற் பயிற்சிக்கொள்
அறிவியல் சார்ந்த அனைத்து நூல்களையும் தெளிவாக கற்றுத் தெரிந்து வைத்துக்கொள். அறிவியல் சார்ந்தே அனைத்து செயல்முறைகளும் நடைமுறையில் உள்ளது. முன்னோர்களின் சில மூடநம்பிக்கை என்று சொல்லக்கூடியவற்றில் உள்ள அறிவியலை புலப்படுத்து.
105. விதையினை தெரிந்திடு
உன் சிந்தனை தெளிவானதாகவும், சரியானதாகவும் மற்றவர்களுக்கு பயனளிக்கும் விதமாகவும் இருக்கக்கூடும் என்று அறிந்து உன் செயலை தொடங்கு.
உணவு பெருக விருப்பம் கொள்.இது, உணவு உண்பதை விருப்பம் கொள் என்று தவறான கோணத்திலும் பார்க்கப்படுகிறது.,
7.எண்ணுவது உயர்வு
8. ஏறு போல் நட
17. குன்றென நிமிர்ந்துநில்
Nice Da Keep Growing ❤️
ReplyDeleteThank you
DeleteThis comment has been removed by the author.
ReplyDelete